இந்த தீபாவளி தல தீபாவளியா?தளபதி தீபாவளியா ?தீபாவளி ரேஸில் ஜெயிக்கப்போவது யார்?
அஜித்தும், விஜய்யும் தான் தமிழ் சினிமாவில் தற்போது உச்ச மற்றும் மாஸ் நடிகர்கள் என்பார்கள். அவர்களுடைய படங்கள் வெளிவருகிறது என்றாலே திரையரங்குகள் திருவிழா போல காட்சியளிக்கும். அவரை நம்பி உள்ள தயாரிப்பாளருக்கும் பணமழை கொட்டும்.
தற்போது இரண்டு நடிகரும் பிசியாக உள்ளார்கள். அந்த வகையில் தற்போது தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுடன் “விஜய் 62” படத்தில் நடித்து வருகின்றார். இவர்களது கூட்டணியில் வெளியான இரண்டு படங்களுமே வெற்றியடைந்ததால் இந்த படத்தின் மீது ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
தல அஜித் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் நான்காவது முறையாக இணைந்து “விஸ்வாசம்” படத்தில் பணியாற்றி வருகின்றார். இந்த கூட்டணியில் உருவான முந்தைய படங்கள் வெற்றி படமாக அமைந்ததால் இந்த படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு மிகவும் அதிகமாகவே உள்ளது.
இருவரும் பெரிய மாஸ் நடிகர் என்றாலும் தலைக்கு எப்போதும் ப்ரோமோஷன் செய்ய தேவையில்லை. தளபதிக்கு குழந்தை மற்றும் குடும்ப ரசிகர்கள் அதிகம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.