ரபேல் நடால் 11வது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!
ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 11வது முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான நடால், அர்ஜென்டினா வீரர் டெல் போட்ரோவை ((del Potro)) எதிர்கொண்டார். 2 மணிநேரத்திற்கு மேல் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் அடுத்தடுத்து 3 செட்டுகளை கைப்பற்றி 11வது முறையாக நடால் இறுதி போட்டிக்கு நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதிப் போட்டியில் வெற்றிப்பெற்ற ஆஸ்திரேலிய வீரர் டோமினிக் தீம் (( Dominic Thiem )), நாளை நடக்கும் இறுதிப்போட்டியில் ரபேல் நடாலை எதிர்கொள்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.