சிரியாவில் குண்டு மழை பொழிந்த ரஷ்ய போர் விமானங்கள்!
ரஷ்ய போர் விமானங்கள் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய இடிலிப் நகரில் குண்டு மழை பொழிந்தன.
இதில் குறைந்தது 44 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்கு இடையே உடல்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதால் உயிர்ச்சேதம் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மக்கட் தொகை அதிகம் உள்ள பகுதியாக இது உள்ள போதும் ,அண்மைக் காலங்களில் ஆயிரக்கணக்கான போராளிகள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியை விட்டு போர் அச்சத்தால் வெளியேறி உள்ளனர்.
ரஷ்யா மற்றும் ஈரான் படைகளின் உதவியுடன் கிளர்ச்சியாளர்களிடமிருந்து அப்பகுதியைக் கைப்பற்ற சிரியா நாட்டு ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.