கொட்டித் தீர்த்த கனமழையால் மும்பையில் வெள்ளம்!மக்கள் வீடுகளுக்குள் ஓய்வெடுக்கும்படி எச்சரிக்கை

வானிலை ஆய்வு மையம், மும்பையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் மும்பை மக்கள் வீடுகளுக்குள் ஓய்வெடுக்கும்படி  தகவல் தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் மிக அதிக அளவிலான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கணிக்கப்படுகிறது. தென்மேற்குப் பருவ மழை இன்று மும்பை கடல்பகுதியை வந்தடைவதால் பொதுமக்கள் முடிந்த வரை வீடுகளை விட்டு வெளியே வராமல் பாதுகாப்புடன் இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Image result for mumbai rain alert Heavy .

சுற்றுலாப் பயணிகளும் வெளியூர்வாசிகளும் கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்கான முன்னேற்பாடுகளை மும்பை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் மழையால் தாதர், பரேல்,பாந்த்ரா, போரிவலி ,அந்தேரி உள்பட நகரின் முக்கியப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment