ரொம்ப அருமையா இருக்கு…’இந்தியன் 2′ படத்தை பார்த்து வியந்த கமல்ஹாசன்.!!
இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்து கமல்ஹாசன் அருமையாக உள்ளதாக பாராட்டியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியன் படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் மிக்பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ள நிலையில், அதனுடைய தொடர்ச்சியாக இயக்குனர் ஷங்கர் 2-வது பாகத்தை கமல்ஹாசனை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இந்த இரண்டாவது பாகத்தில் ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, காஜல் அகர்வால், சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ” இந்தியன் 2″ படத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள காட்சிகளை பார்த்து இயக்குனர் ஷங்கருக்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். என தகவல்கள் வெளியாகியுள்ளது. கண்டிப்பாக கமல்ஹாசன் பாராட்டியுள்ள்ளார் என்றால் படம் அந்த அளவிற்கு தரமாக இருக்கும் என தெரிகிறது.
மேலும், இந்தியன் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகலாம் என தெரிகிறது. படத்தின் ட்ரைலர் அல்லது டீசரை வரும் ஜூலை மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.