புதிய மதகு அமைக்கும் பணிகள் கிருஷ்ணகிரி அணையில் தொடக்கம்!
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், கிருஷ்ணகிரி அணையில் உடைந்த மதகுக்குப் பதிலாகப் புதிய மதகு அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கிருஷ்ணகிரி அணையின் முதல் மதகு கடந்த ஆண்டு நவம்பரில் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதனால் அணையில் முழுக் கொள்ளளவான 52 அடிக்குப் பதில் 44அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்பட்டது.
உடைந்த மதகுக்குப் பதில் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய மதகு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு நீர்மட்டம் 32அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று புதிய மதகு அமைக்கும் பணிகளைக் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன் தொடங்கி வைத்தார். ஒரு மாதக் காலத்தில் பணிகள் முடிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.