மெக்சிகோ கால்பந்தாட்ட மைதானத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு.! 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு.!
மெக்சிகோவில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்று கிழமையன்று மத்திய மெக்சிகோவில் உள்ள கால்பந்தாட்ட மைதானத்தில் துப்பாக்கியுடன் வந்த மர்ம கும்பல் ஒன்று, திடீரென அங்கு துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில், மூன்று பெரியவர்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் சுட்டு கொல்லப்பட்டதாக மத்திய ஹிடால்கோ மாநிலத்தின் காவல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலில் மற்றவர்கள் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது இந்த கொலைகளுக்கு அதிகாரிகள் எந்த காரணமும் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். ஆனால், உயிரிழப்புகள் ஏற்பட்ட உள்ளூர் மக்களுக்கும், மெக்சிகோவைச் சேர்ந்த மக்களுக்கும் இடையிலான அடிக்கடி தகராறு ஏற்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பரில், மெக்சிகோவின் தெற்கில் உள்ள மோரேலோஸ் கால்பந்து மைதானத்தில் இதேபோன்று ஓர் தாக்குதல் நடைபெற்றதாகவும், அந்த தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் அதில், யெகாபிக்ஸ்ட்லா நகரின் முன்னாள் மேயரும் ஒருவர் என கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.