நியூசிலாந்தில் சோகம்…தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து….10 பேர் பலி…!!
வெலிங்டனில் உள்ள 4 மாடி தங்கும் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள தங்கும் விடுதியில் நேற்று இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். மேலும், மற்றவர்கள் இந்த 4 மாடிக் கட்டிடத்தில் இருந்து பைஜாமாக்களுடன் வெளியேறும்படி தீயணைப்பு வீரர்கள் கட்டாயப்படுத்தினார்கள்.
இந்த விடுதியில், கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்டோர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
திடீரென, தீ விபத்து ஏற்படத்தை தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சில மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் இந்த தீ விபத்துக்கான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீ விபத்தில் பலியானோருக்கு பிரதமர் கிறிஸ் ஹாப்கின்ஸ் இரங்கல் தெரிவித்தார். நியூசிலாந்து விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.