பேரவையில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பட்டுப் புடவை தேக்கம் குறித்து விளக்கம்!
கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன்,,திருமணம் தவிர மற்ற சமயங்களில் பட்டுப்புடவைகளை அணிய பெண்கள் விரும்பாத காரணத்தினால், பட்டு புடவைகள் விற்பனை தேக்கமடைந்து விட்டதாக, தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில், கைத்தறித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ எழிலரசன், தேக்கமடைந்துள்ள பட்டுப்புடவை விற்பனையை அதிகரிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்று எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்திருக்கிறார். மேலும், பட்டு ஜரிகை இல்லாத புடவைகளையே பெரும்பாலும் அணிய பெண்கள் விரும்புவதாகவும், இதனால், ஜரிகையுடன் கூடிய பட்டுப்புடவைகள் தேங்கிவிட்டதாகவும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.