சட்டப்பேரவையிலிருந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

Default Image

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேட்டூர் அணையிலிருந்து ஜுன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படாது என்பதை கண்டிக்கும் வகையில்,  சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தன.

பேரவையில் முதலமைச்சர் அறிவித்த குறுவை தொகுப்பு திட்டத்திற்கு அமைச்சர்கள் நன்றி தெரிவித்து பேச சபாநாயகர் அனுமதித்தார். அமைச்சர்கள் நன்றி தெரிவிக்க அனுமதி வழங்கினால், தாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் அனுமதிக்க வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் கோரினார்.

ஆனால் அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதையடுத்து, ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படாது என்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக வெளிநடப்பு செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார். இதைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். இதேபோல காங்கிரஸ் உறுப்பினர்களும் முஸ்லீம் லீக் உறுப்பினரும் வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து பேரவையில், திமுக வெளிநடப்பை விமர்சனம் செய்யும் வகையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் 1996, 1999, 2006, 2007, 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படவில்லை என பட்டியலிட்டார். யார் ஆட்சியில் இருந்தாலும் மேட்டூர் அணையில் நீர் இருந்தால்தான் குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்க முடியும்  எனவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக ஆட்சி காலத்தில் பலமுறை ஜூன் மாதத்தில் முன்னதாகவே தண்ணீர் திறந்ததாகவும் முதலமைச்சர் கூறினார்.

மேலும்  செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
BJP State President Annamalai Arrest
Parliament session incidents
PM Modi jaipur Accident
Vidaamuyarchi From Pongal 2025
Spain Andaluz Viilage Street view
actor soori