கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை மக்களுக்காக போராடுவேன்.! இம்ரான் கான் சூளுரை.!

என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாகிஸ்தான் மக்களுக்காக போராடுவேன் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார்.
பாகிஸ்தானில் அண்மைகாலமாகவே அசாதாரண சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே பொருளாதார மந்தநிலை, முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது, அதன் பின்னர் எழுந்த போராட்டம், வன்முறை , பின்னர் விடுதலை என நாடே பதற்றமான நிலையில் இருக்கிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்டதில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் கூறுகையில், கைது செய்யப்பட்ட என்னை ராணுவத்தினர் வன்முறையை காரணம் காட்டி மரண தண்டனை கொடுக்க நினைத்தார்கள். அது நடக்கவில்லை. அதன் பின்னர் தற்போது தேச துரோக புகாரை சுமத்தி 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க பார்க்கிறார்கள் என குற்றம் சுமத்தினார். மேலும் என் உடலில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையில் நான் பாகிஸ்தான் மக்களுக்காக போராடுவேன் என்றும் சூளுரை விதித்தார் முன்னாள் பிரதமர் இம்ரான்கான்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025