கள்ளசாராய மரணங்களுக்கு திமுக – அதிமுக தான் காரணம்.! அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம்.!

கள்ளசாராயம் குடித்து பலர் உயிரிழந்ததற்கு திமுக – அதிமுக என இரு கட்சிகளும் தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் எக்கியர் குப்பம் எனும் மீனவ கிராமத்தில் கள்ளசாராயம் குடித்து இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், பலருக்கு இன்னும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த கள்ளச்சாராய மரணத்திற்கு திமுக மட்டும் காரணமல்ல திமுக – அதிமுக இரண்டு கட்சிகளும் தான் தான் காரணம். இந்த கள்ளச்சாரயமானது வருடக்கணக்கில் நடமாட்டத்தில் இருந்துள்ளது. விவசாயிகள் மற்றும் கூலி தொழிலாளிகளை மது இல்லாமல் இருக்க முடியாது என்ற சூழலில் இரு கட்சிகளும் மாற்றிவிட்டன என கடுமையாக குற்றம் சாட்டினார்.