அரசு நலத்திட்டங்களை கிராமபுற குழந்தைகள், பெண்கள் ஆகியோரிடம் எடுத்து செல்ல வேண்டும்!ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
இந்திய பெண்கள் சங்க நூற்றாண்டு விழாவில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கிராமபுற பகுதிகளில் உள்ள குழந்தைகள், பெண்கள் ஆகியோரிடம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களை படித்த, முன்னேறிய பெண்கள் எடுத்து செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர், தமிழகத்தை சேர்ந்த முத்துலட்சுமி அம்மையார் செய்த பணிகளால் தான் கிராமபுற சுகாதாரம் பெருமளவில் மேம்பட்டதாகக் கூறினார்.
புற்று நோயை ஒழிக்க தனது வாழ்நாளையே அர்பணித்துள்ள மருத்துவர் சாந்தாவின் பணிகள் மிகவும் முக்கியமானவை எனக் கூறிய அவர், இந்தியாவில் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி ஆகிய உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.