மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் – சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை..!

TN IAS Transfer

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை

கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி சட்டப்பேரவையில், சத்துணவுத் திட்டத்தில் பயனடைந்து வரும் குழந்தைகளுக்கு, பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல் இனி வரும் காலங்களில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்த நாளன்றும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று சத்துணவில் இனிப்பு பொங்கல் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கன்வாடி, சத்துணவு மையங்களில் இரண்டு முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு பொங்கல் தர அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

sweet pongal
sweet pongal [Imagesource : twitter /@ramkrishna]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்