ஷூட்டிங்கிற்கு லேட் ஆயிடுச்சு…லிஃப்ட் கேட்டுச் சென்ற நடிகர் அமிதாப் பச்சன்…வைரலாகும் புகைப்படம்.!!
நடிகர் அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமை, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், தனது படப்பிடிப்பு தளத்திற்கு விரைவாக செல்லவும் நபர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பைக் சவாரி செய்தார். அதற்கான புகைப்படம் ஒன்றையும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
பைக்கில் ஏறி சவாரி செய்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட அமிதாப்பச்சன் ” எனக்கு உதவி செய்ததற்கு நன்றி நண்பரே.. உங்களைத் தெரியாது.. ஆனால் நீங்கள் என்னைக் கடமையாக்கி, பணியிடத்திற்குச் சரியான நேரத்தில் அழைத்துச் சென்றீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “நீங்கள் ஒரு அந்நியரிடமிருந்து சவாரி செய்தீர்கள் ஹாஹா” என்றும் இருவரும் ஹெல்மெட் அணியவில்லை என்றும் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
மேலும், நடிகர் அமிதாப்பச்சன் ப்ராஜக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.