நக்சலைட் தளபதி சுட்டுக்கொலை ! சத்தீஸ்கர் காட்டுக்குள் என்கவுன்டர்..!

Default Image
மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும் இடையிலான இடைவெளியை குறைப்பதற்கு ஆயுத வன்முறையே சிறந்த தீர்வென கருதுகின்றனர்.
பல்லாண்டு காலமாக அரசிடம் போராடி பெறமுடியாத சில சலுகைகளையும் ஆயுதப் புரட்சியின்மூலம் அடைந்துவிட முடியும் என கருதும் இவர்கள் சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, மணிப்பூர் உள்ளிட்ட சில மாநிலங்களில் நக்சலைட்களாகவும், மாவோயிஸ்ட்களாகவும், நாடெங்கிலும் உள்ள காடு, மலைகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை வேட்டையாட தனிப்படை பிரிவினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படையினருக்கு துணையாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் உடன் செல்வதுண்டு.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், பிஜப்பூர் மாவட்ட காட்டுப் பகுதிக்குள் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையில் நக்சலைட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டான்.
தலைநகர் ராய்ப்பூரில் இருந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஜாரமோங்கியா காட்டுப்பகுதியில் இன்று நக்சல் ஒழிப்பு படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சுமார் 30 நக்சலைட்கள் ரோந்துப் படையினர் மீது துப்பாக்கிகளால் சுட்டு அதிரடியாக தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மோட்டி ஃபார்ஸா(28) என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. #tamilnews ##Naxalcommanderkilled

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்