சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு!

senthil balaji & savukku

உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருவதாக சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு.

பிரபல ஊடகவியலாளர் மற்றும் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதன்படி, சவுக்கு சங்கர் மீது சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி 4 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளார்.

அவதூறு பரப்பும் வகையில், தொடர்ந்து உண்மைக்கு புறம்பான தகவல்களை பேசி வருவதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுவெளியில் சொல்லக்கூடாது என நீதிமன்ற உத்தரவு இருக்கும் நிலையில் தொடர்ந்து அவதூறு பரப்புவதாகவும் அமைச்சர் புகார் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பல கோடி ரூபாய் செலவில் ஒரு ஆடம்பர மாளிகை கட்டிக் கொண்டிருப்பதாக சவுக்கு சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதுமட்டுமின்றி கட்டப்பட்டு கொண்டிருக்கும் அந்த வீட்டின் முன் எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்திருந்தார்.

மேலும், அவரது பதிவில் கரூர் புறவழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் 300 கோடி வீட்டை பார்வையிட்டு கள மதிப்பீடு செய்தேன் என்றும் கிரகப்பிரவேசத்துக்கு கூப்புட மாட்டன்னு நானே வந்து பாத்துட்டேன் அண்ணே எனவும் பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்