இன்றும், நாளையும் வெப்பநிலை அதிகரிக்கும்…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை
தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், இன்றும் நாளையும் வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
மழை
மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 17-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18, 19 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மோக்கா புயல்
நேற்று வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர “மோக்கா” புயல் நேற்று மதியம் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கரையை கடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.