கள்ளச்சாராய விவகாரம்..! விழுப்புரம் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

Chief Minister MKStalin

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் விழுப்புரம் புறப்பட்டார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி தற்போது வரையில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கள்ளச்சாராயம் வியாபாரிகள் ஆறுமுகம், முத்து, ரவி ஆகிய மூவரையும் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற முதலமைச்சர் முக.ஸ்டாலின் விழுப்புரம் புறப்பட்டுள்ளார். இன்று விழுப்புரம் செல்லும் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரையும் சந்திக்கிறார்.

மேலும், விழுப்புரம், கடலூர், நாகை மற்றும் மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 203 கள்ளச் சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 5901 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தலைவர் அலுவலக தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army