Today’s Live: கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்..? டெல்லி செல்கிறார் டி.கே. சிவகுமார்..!
டெல்லி செல்கிறார் டி.கே. சிவகுமார்:
கர்நாடகாவின் அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சித்தராமையா டெல்லி வந்துள்ளார். அவரைத்தொடர்ந்து, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் டெல்லி புறப்படவுள்ளார். முன்னதாக, முதல்வர் யார் என்ற முடிவை தலைமையிடம் விட்டுவிட்டோம், டெல்லி செல்வதற்கு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
15.05.2023 5:15 PM
உடனடி கைது:
கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். இதனைத்தொடர்ந்து நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “கள்ளச்சாராய விற்பனை தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. கள்ளச்சாராயத்தை டாஸ்மாக் பாட்டிலில் ஊற்றி விற்றுள்ளனர். குற்றத்துடன் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள்” என அறிவித்தார்.
15.05.2023 3:15 PM
முதல்வர் நேரில் சந்தித்து ஆறுதல்:
விழுப்புரத்தில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் கள்ள சாராயம் அருந்திய 34 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
#WATCH | Tamil Nadu CM MK Stalin reaches Viluppuram Government Hospital and meets the people who are hospitalised here after allegedly consuming spurious liquor. pic.twitter.com/rvXq4M1jgN
— ANI (@ANI) May 15, 2023
15.05.2023 2:53 PM
டெல்லி புறப்பட்டார் சித்தராமையா :
காங்கிரஸ் தலைவர் சித்தராமையா பெங்களூரு ஹெச்ஏஎல் விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார். அடுத்த முதல்வர் யார் என்று எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்றிரவு 2 மணி வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி விரைகிறார்.
#WATCH | Congress leader Siddaramaiah leaves for Delhi from Bengaluru’s HAL airport.#Karnataka pic.twitter.com/tWlHLl4poA
— ANI (@ANI) May 15, 2023
15.05.2023 1:14 PM
ராஜ்நாத் சிங் சந்திப்பு:
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்தார். முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலைச் சந்தித்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதீபா பாட்டீலின் கணவர் டாக்டர் தேவிசிங் ஷெகாவத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
#WATCH | Defence Minister Rajnath Singh meets former President of India Pratibha Patil. pic.twitter.com/GpGtwx45fI
— ANI (@ANI) May 15, 2023
15.05.2023 12:45 PM
அதானி குழும முறைகேடு வழக்கு:
அதானி குழும பங்குச்சந்தை முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. முன்னதாக, விசாரணைக்கு கூடுதலாக 6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று செபி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் பரிசீலிக்க உள்ளது.
15.05.2023 12:10 PM
சட்ட வரைவு பயிற்சி திட்டம்:
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா டெல்லியில் சட்ட வரைவு குறித்த பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார். “சட்ட வரைவு என்பது ஒரு அறிவியலோ கலையோ அல்ல, அது ஆவியுடன் செயல்படுத்தப்பட வேண்டிய ஒரு திறமை. சட்டம் தெளிவாக இருக்க வேண்டும் மற்றும் சாம்பல் பகுதி எதுவும் இருக்கக்கூடாது” என்று அவர் கூறுகிறார்.
#WATCH | Union Home Minister Amit Shah inaugurates training programme on Legislative Drafting in Delhi
“Legislative drafting is not a science or an art, it is a skill that must be implemented with spirit. The law must be clear and no grey area should be there,” he says pic.twitter.com/DKm2mTciEP
— ANI (@ANI) May 15, 2023
15.05.2023 11:30 AM
டெல்லி விரைகிறார் சித்தராமையா :
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா இன்னும் சற்று நேரத்தில் டெல்லிக்கு செல்கிறார். அடுத்த முதல்வர் யார் என்று எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நேற்றிரவு 2 மணி வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து சித்தராமையா காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி விரைகிறார்.
15.05.2023 11:00 AM