சென்னை திருவிழா மே 21ம் தேதி வரை நீட்டிப்பு!

chennaifestival2023

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழா மே 21ம் தேதி வரை நீட்டிப்பு.

சென்னை தீவுத்திடலில், தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் நடைபெற்று வரும்  சர்வதேச கைத்தறி, கைவினை பொருள் மற்றும் உணவு திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய சென்னை திருவிழா மே 15-ஆம் தேதி இன்று வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளை சேர்ந்த கைவினை கலைஞர்கள் தங்களது பொருட்களை காட்சிப்படுத்த  உள்ளனர். பூட்டான், நைஜீரியா, வங்கதேசம், ஈரான், நேபாளம், இலங்கை, தென் ஆப்பிரிக்கா நாடுகளின் கைவினை பொருட்கள் இடம்பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள 20 மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் தங்கள் பொருட்களை 80 அரங்குகளில் காட்சிப்படுத்தி உள்ளனர்.

கைவினைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதுடன் உணவு திருவிழாவும் நடைபெற்று வருகிறது. 2023ம் ஆண்டுக்கான ‘சென்னை விழா’ ரூ.1.50 கோடி செலவில் நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் கைவினை, உணவு திருவிழாவை மே 21-ஆம் தேதி நீட்டித்து சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது. சென்னை மே 15 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மே 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை திருவிழாவிற்கு நுழைவு கட்டணம் ரூ.10 வசூலிக்கப்படும்.  இந்த திருவிழாவில் 311 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்