சூப்பர்…தனுஷுடன் இணையும் நெல்சன்…”D50″ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!!

dhanush and nelson

நடிகர் தனுஷின் 50-வது  திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கடந்த  சில மாதங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தின் இயக்குனர் யார் என்று அறிவிக்கப்படவில்லை.

dhanush and nelson
dhanush and nelson d50 [Image source : file image ]

இதனையடுத்து, அதற்கான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, தனுஷின் 50-வது  திரைப்படத்தை பிரபல இயக்குனரான நெல்சன் திலீப் குமார் இயக்கு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  கடந்த ஆண்டே  நடிகர் தனுஷ் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்து ஒரு படம் செய்யப் போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், தற்போது இந்த தகவல் உறுதியாக விட்டதாக சினிமா வட்டாரத்தில்  கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. நெல்சன் தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை முடித்த பிறகு தனுஷின் வைத்து இயக்கும் படத்திற்கான கதையை தயாரிக்கும் பணியில் ஈடுபடுவார் என தெரிகிறது.

Captain MilLer update
Captain MilLer update [Image source : file image ]

மேலும், நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும்  ஜூன் மாதம் வெளியாகிறது . டிரெய்லர் வரும் ஜீலை மாதம் வெளியாகிறது என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்