உயரும் கள்ளச்சாராய உயிரிழப்புகள்.! மாவட்ட எஸ்.பிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு.!

மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்பிகளுக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வரையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கள்ளச்சாராயம்  விற்றதாக அமரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், இதே போல கள்ளச்சாராய விற்பனை செய்ததாக 22 பேர் கைது செய்யப்பட்டுளள்னர்.

தற்போது கூடுதல் நடவடிக்கையாக, தமிழக டிஜிபி சைலேந்திர பாபு மாவட்ட எஸ்பிகளுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதில், மாவட்டத்தில் விஷ சாராயம் எங்கேனும் விற்கப்படுகிறதா என்பதை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு , மாவட்ட எஸ்.பிகளுக்கு மட்டுமல்ல, மாநகர காவல் ஆணையர்கள், மதுவிலக்கு பிரிவு போலீசார் என அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு சென்றுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.