இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்கும் புதிய கட்டிடங்களின் லிஸ்ட்…

MK Stalin

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் அரசு சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். 

இன்று சென்னையில் தலைமை முதல்வர் மு.க.ஸ்டாலின் , தமிழக அரசு சார்ப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக்க திறந்து வைக்க உள்ளார். இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன.

அதில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவியருக்கான விடுதிக் கட்டிடங்கள், பள்ளிக் கட்டிடங்கள், ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டிடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

அதே போல, மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளங்கள், மீன் வளர்ப்புக்குளங்கள், பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலகக் கட்டிடங்களையும் முதலமைச்சர் இன்று காணொளி வாயிலாக தலைமை செயலகத்தில் இருந்தவாறு திறந்து வைக்கிறார்.

மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தையும் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்