ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால் அடித்து நொறுக்கப்படும்!வைகோ
ஸ்டெர்லைட் சி.இ.ஓ.விடம் தெரிவித்ததாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,நீதிமன்றமே அனுமதி கொடுத்து தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறந்தால், மராட்டியத்தின் ரத்தனகிரியில் நிகழ்ந்ததை போல் மக்களே ஆலையை அடித்து உடைப்பார்கள் என கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னதாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தற்போது தற்காலிகமாக தான் மூடப்பட்டுள்ளது, ஓரிரு மாதங்களில் மீண்டும் திறக்கப்படும் என்று ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ராம்நாத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.