தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு:ஜூன் 30-ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும்!அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம்
அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் ,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, வரும் 30-ம் தேதி வரை மனுக்கள் பெறப்படும் என்று அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதுகுறித்த விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவர் அருணா ஜெகதீசன், கடந்த 4-ஆம் தேதி தூத்துக்குடி சென்று விசாரணையை தொடங்கினார்.
இந்த நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர், வரும் 30-ஆம் தேதி வரை மனுக்கள், பிரமாண வாக்குமூலங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அருணா ஜெகதீசனின் இல்லம், தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகையில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகம் ஆகிய இடங்களில் மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.