காந்தியை போலவே மக்களின் மனதை வென்றுள்ளீர்கள்..! கமலஹாசன் ட்வீட்..!

Kamalhaasan Rahulgandhi

மநீம தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகா தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த மே 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

இந்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் முன்னிலையில் உள்ள 136 தொகுதிகளில் 114 இடங்களில் வெற்றி பெற்று 22 இடங்களில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகம் மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதிலும் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க தேவையான அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர், ராகுல் காந்தியின் இந்த வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள், காந்தியைப் போலவே, நீங்கள் மக்களின் இதயங்களுக்குள் நுழைந்தீர்கள் என்று கூறியுள்ளார்.

மேலும், அவரைப் போலவே உங்கள் மென்மையான வழியில் அன்புடனும் பணிவுடனும் உலகின் சக்திகளை அசைக்க முடியும் என்பதை நிரூபித்தீர்கள், பிரிவினையை நிராகரிக்க கர்நாடக மக்களை நீங்கள் நம்பினீர்கள், அவர்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஒற்றுமையாக பதிலடி கொடுத்தனர். வெற்றிக்கு மட்டுமல்ல வெற்றியின் விதத்திற்கும் பாராட்டுக்கள் என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts