KarnatakaElections2023: காங்கிரஸ் 136 தொகுதிகளில் 91 இடங்களில் வெற்றி..!

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கிட்டத்தட்ட 136 இடங்களில் முன்னிலை வகித்து பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. ஒவ்வொரு சுற்றின் வாக்கு எண்ணிக்கை முடிவின் விவரங்களை தலைமை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் முன்னிலையில் உள்ள 136 தொகுதிகளில் 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே வேலையில், ஆளும் பாஜக முன்னிலையில் உள்ள 64 தொகுதிகளில் 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மேலும், மதசரபற்ற ஜனதா தளம் முன்னிலையில் உள்ள 20 தொகுதிகளில் 15 இடங்களில் வெற்றி பெற்று, 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.