பாஜக அலுவலகத்தில் புகுந்த பாம்பு.! முதல்வர் பசவராஜ் வருகையின் போது பரபரப்பு.!

முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஷிகான் தொகுதி பாஜக அலுவலகத்தில் பாம்பு புகுந்தது.
கர்நாடக முதல்வர் பசுவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியான ஷிக்கானில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு இன்று வாக்கு எண்ணிக்கை நாள் என்பதால் முதல்வர் பசவராஜ் பொம்மை வந்துள்ளார். அப்போது அங்கு மேற்கூரையின் வழியாக பாம்பு ஒன்று புகுந்துவிட்டது. முதல்வர் வருகையின் போது பாம்பு வந்த காரணத்தால், அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பிறகு அந்த பாம்பு பத்திரமாக மீட்கப்பட்டது.
தற்போது தான் ஷிக்கான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்ற தகவல் வெளியாகியுள்ளது. இருந்தும் பாஜக தொடர் இறங்குமுகமாகும், காங்கிரஸ் முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டும் சென்று கொண்டு இருக்கிறது. இதனால், பெரும்பாலான பாஜக அலுவலகங்கள் வெறிசோடி காணப்படுகின்றன.