காங்கிரஸ் 3 இடங்களில் வெற்றி.. 129 இடங்களில் முன்னிலை – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவல்!

கர்நாடக தேர்தலில் கல்கட்கி மற்றும் தார்வாட் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில், ஆரம்ப முதலே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதனால், கர்நாடகாவில், காங்கிரஸ் மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக கோட்டையை காங்கிரஸ் தகர்த்துள்ளது என்றும் கூறலாம்.

இந்த நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதன்படி, கல்கட்கி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சந்தோஷ் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளார். இதுபோன்று, தார்வாட் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வினய் குல்கர்னி 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் வெற்றி பெற்றுள்ளார். மேலும், காங்கிரஸ் மாநில தலைவர் டிகே.சிவகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 129 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது. மேலும், பாஜக 66 இடங்களில் முன்னிலை பெற்று, ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, கர்நாடகா தேர்தலில் 130க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிப்பதால் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பது உறுதியானது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்