#KarnatakaElectionResults : முக்கிய அரசியல் தலைவர்களின் முன்னிலை நிலவரம்.!

karnataka election

டி.கே.சிவகுமார், சித்தராமையா, பசவராஜ் பொம்மை, குமாரசாமி ஆகியோர் அவரவர் தொகுதியில் முன்னிலை வகித்து வருகின்றனர். 

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளை விட  சற்று அதிகமாக காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக பின்னடைவை சந்தித்து வருகிறது.  .

தற்போது முக்கிய அரசியல் தலைவர்களின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி உள்ளது. அதில், கனகபுரா தொகுதியில் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமார் முன்னிலை வகித்து வருகிறார். வருணா தொகுதியில் முன்னாள் முதல்வர் சித்தராமையா வகித்து வருகிறார்.

அடுத்து, ஷிகான் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை முன்னிலை வகித்து வருகிறார். சென்னபட்ணா தொகுதியில் பின்னடைவை சந்தித்த குமாரசாமி தற்போது சற்று முன்னிலை வகித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்