30 ஆயிரம் சம்பளம்.? 30 லட்சதிற்கு டி.வி.! 1 கோடிக்கு பங்களா.! அதிகாரிகளை மிரள வைத்த பெண் அரசு ஊழியர்.!

Hema Meena Madhya pradesh

30 ஆயிரம் சம்பளம் வாங்கும் மத்திய பிரதேச அரசு ஊழியர் 7 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார். 

மத்திய பிரதேசத்தை சேர்ந்த அரசு உதவி பொறியாளர் ஒருவர் தனது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 332 விழுக்காடு அதிக சொத்துக்கள் சேர்த்து வைத்து அதிகாரிகளை வியக்க வைத்து உள்ளார். இது குறித்து அறிந்த லோக்  சிறப்பு பிரிவினர் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி வீட்டிற்கு ஆய்வுக்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த காவல்துறை வீட்டு வசதி ஒப்பந்த பொறுப்பு வகிக்கும் உதவி பொறியாளர் ஹேமா மீனாவின் மாத சம்பளம் சுமார் 30,000 மட்டுமே. ஆனால், அவர் 7 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் சேர்த்து வைத்தது அதிகாரிகள் செய்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதில், அவரது வீடு மதிப்பு ஒரு கோடி ரூபாய் இருக்கும் எனவும், அவரிடம் 20 கார்கள் இருக்கின்றது எனவும், 30 லட்ச ரூபாய்க்கு பிரம்மாண்ட டிவி ஒன்றை தனது வீட்டில் வைத்துள்ளார் என்றும் தகவல் கிடைத்துள்ளன. மேலும், 80 விலை உயர்ந்த பசுக்கள் அங்குள்ள பண்ணை வீட்டில் இருக்கிறது என்றும், பண்ணை வீட்டு தொழிலாளர்களுடன் பேசுவதற்கு சிறப்பு வாக்கி டாக்கி என பிரம்மாண்ட சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார் அந்த அரசு அதிகாரி ஹேமா மீனா.

இதனை எடுத்து வருமானத்திற்கு அதிகமாக, சுமார் 332 சதவீதத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ள அரசு ஊழியர் ஹேமா மீனா மீது லோக் ஆயுக்தா பிரிவினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்