மோச்சா புயல் தீவிரம்…5 மாநிலங்களில் கனமழை அலெர்ட் கொடுத்த வானிலை மையம்.!!
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ‘மோச்சா’ புயலாக உருவானது. இது கடுமையான புயலாக தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக 6 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 12 முதல் 14 -ஆம் தேதி வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘மோச்சா’ பயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலும் வலுப்பெற்று 14.05.2023 நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை கடக்கக்கூடும். அந்த சமயத்தில் காற்றின் வேகம் 150 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 175 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.