சிபிஎஸ்இ 12ம் வகுப்பை தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு முடிவும் வெளியானது!

CBSE 10th results

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை தொடர்ந்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வு  வெளியிட்டது சிபிஎஸ்இ. 

நாடு முழுவதும் இன்று காலை சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் வெளியிட்டிருந்தத்து. அதன்படி,  http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 87.33% மாணவ, மாணவிகள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் திருவனந்தபுரம் 99.91%, 2வது இடத்தில் பெங்களூரு 98.64% மற்றும் 3வது இடத்தில் சென்னை 97.40% இருந்தது. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் யார் முதலிடம், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் என்பதை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவிக்கவில்லை. மாணவர்களிடம் தேவையற்ற போட்டியை தவிர்க்கவே விவரங்கள் அறிவிக்கவில்லை என கூறப்பட்டது. இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்புத் பொதுத்தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

இந்த நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சில மணி நேரம் முன்பு வெளிநாய நிலையில் தற்போது 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகியுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in என்ற இணையத்தில் மாணவர்கள் தங்களது விவரங்களை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்