குஜராத்தில் 4,400 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி.!!

PMModi

குஜராத் மாநிலத்தில் ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

குஜராத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காகவும், 19 ஆயிரம் பயனாளிகளுக்கு மத்திய அரசின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளை வழங்குவதற்காகவும் ஒரு நாள் பயணமாக பிரதமர் மோடி குஜராத் வந்துள்ளார். இந்நிலையில், காந்தி நகரில் சுமார் ரூ.4,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.

பனஸ்கந்தா மாவட்டத்தில் பல கிராம குடிநீர் விநியோக திட்டங்கள், அகமதாபாத்தில் ஆற்று மேம்பாலம், நரோடா ஜிஐடிசியில் வடிகால் சேகரிப்பு வலையமைப்பு மற்றும் மெஹ்சானாவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை இன்று தொடங்கப்படும் முக்கிய திட்டங்களில் அடங்கும்.

இதனையடுத்து, காந்தி நகரில் நடைபெற்ற அகில இந்திய முதன்மை ஆசிரியர் கூட்டமைப்பின் 29ஆவது இருபதாண்டு மாநாடான அகில் பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷனில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அதில், ஆசிரியர்களுடனான தனது உரையாடல் தேசிய அளவில் கொள்கைகளை வகுக்க உதவியது என்று கூறினார். தொடர்ந்து, தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதில் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் பங்களித்துள்ளனர். 21ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப இந்தியா இன்று புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது, என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்வு முடிந்த பின்னர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுமார் 19,000 வீடுகளை தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு பிரதமர் மோடி வழங்கவுள்ளார். இதன்பின், தற்பொழுது காந்திநகரில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் நிலையை ஆய்வு செய்வதற்காக பிரதமர் மோடி குஜராத் இன்டர்நேஷனல் பைனான்ஸ் டெக் சிட்டிக்கு பயணம் செய்ய உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்