Paytm பண பரிவர்த்தனையில் 3 லட்சம் மோசடி..? சென்னை உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு.!!
நவீன காலத்தில் அனைத்து தரப்பினரும் பணத்தை அனுப்புவதற்கோ அல்லது பொருட்களை வாங்கும்போதோ பெரும்பாலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை தான் உபயோகிக்கிறார்கள். அதிலும் Paytm மூலம் பணப்பரிவர்த்தனை செய்துகொள்ளும் வசதியை அதிகமானோர் பயன்படுத்தி வருகிறார்கள். சமீபகாலமாக இந்த Paytm பணப்பரிவர்த்தனையில் மோசடி செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
அந்த வகையில், திருச்சியை சேர்ந்த மாணவி ஒருவர் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து தன்னுடய அனுமதி இல்லாமலே 3 லட்சம் பணம் திருடு போனதாக சைபர் க்ரைமிலும் . வங்கியிடமும் புகார் அளித்துள்ளார். இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அந்த பெண் ரிசர்வ் வங்கியிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.
மேலும், நடவடிக்கை எடுக்காத காரணத்தால், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது இன்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசர்வ் வங்கி தரப்பில் தாங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் Paytm -க்கு இடையே நடக்கும் பணபரிவர்த்தனையில் தலையிடுவது இல்லை என விளக்கம் கொடுத்துள்ளனர்.
அணைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா “மின்னணு பணபரிவர்த்தனைகளை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதன் மோசடிகளால் வாடிக்கையாளர்கள் பெருதும் பாதிக்கப்படுகிறார்கள். மின்னணு சேவை நிறுவனமும், வங்கியும் மாறி மாறி பழி போடுவதை ஏற்க முடியாது. எனவும், மாணவி வங்கி கணக்கில் இருந்து திருடு போன ரூபாய் 3 லட்சத்தை திரும்பி தர Paytm -க்கு உத்தரவிடும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டு உள்ளார். இரண்டு வாரங்களில் மாணவியின் பணத்தை திருப்பி கொடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.