அதிசயம் : கொட்டிய பணமழை.! கொண்டாடிய மக்கள் ..!

Default Image

வானத்தில் இருந்து பறந்து வந்த 500 ரூபாய் நோட்டுக்கள்…போட்டி போட்டு அள்ளிச் சென்ற பொது மக்கள்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாத்தனுார் பாரிப்பள்ளிப் பகுதியில், நேற்று முன் தினம் மாலை, திடீரென வானில் இருந்து தாள்கள் காற்றில் சுழன்ற படி, வந்து கொண்டிருந்தன.

அது என்னவென்று பார்த்தவர்களுக்கு, அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி….ஏனெனில், வானத்தில் இருந்து பறந்து வந்தவை, 500 ரூபாய் நோட்டுக்கள்.

இதைக் கண்ட, அந்தப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் போட்டி போட்டுக் கொண்டு, அந்தப் பணத்தை எடுக்கத் துவங்கினர். சாலையில் வாகனங்களில் சென்று கொண்டிருந்தவர்களும், தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு, அந்த 500 ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டனர்.

அவை ஏதும் கள்ள நோட்டுக்களா, என்று ஆய்ந்து பார்த்த போது, அவை அனைத்தும், ஒரிஜினலான புது சலவை 500 ரூபாய் நோட்டுக்கள் என்று தெரிய வந்தது. அந்தப் பகுதியல் வசிக்கும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவருக்கு மட்டும், 15 ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் கிடைத்துள்ளன.

இவை எங்கிருந்து வந்தன? எப்படி வானத்தில் இருந்து, இந்த நோட்டுக்கள் பறந்து வந்தன, என்று எல்லோரும் ஆச்சர்யம் அடைந்தனர்.

இதனால், தற்போது. அந்தப் பகுதியில் உள்ளவர்கள், வானத்தையே அன்னாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஏதாவது காசு பணம், வானத்தைப் பொத்துக் கொண்டு, கொட்டும் என்று எதிர் பார்க்கின்றனர். மேலும் இது சம்மந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்