விவசாயிகளுக்கு நற்செய்தி! இனி தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை.. தனி இயங்குதளம் உருவாக்கம்!

grains

விவசாயிகள் பயிர்க்கடன், நிவாரணம் பெற ஏதுவாக ஒரே இணையதளத்தை உருவாக்கியது தமிழக அரசு.

விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் Grains எனும் புதிய இயங்குதளத்தை உருவாகியுள்ளது தமிழக அரசு. அதன்படி, உழவர் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் விவசாயிகள் அனைவரும் பயன்பெறும் வகையில் (GRAINS) எனும் புதிய இயங்குதளத்தை தமிழ்நாடு அரசின் வேளாண்மை – உழவர் நலத்துறை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியுள்ளதால் அவர்கள் சிரமத்தை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த இயங்குதளம் மூலம் பயிர்க்கடன், நெல், கரும்புக்கான ஊக்கத்தொகை, இயற்கை பேரிடர் நிவாரணம் என இனி எதற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் ஆதார் எண், நில விவரம், பயிர் சாகுபடி உள்ளிட்ட விவரங்களை சேகரித்து இந்த புதிய (GRAINS) or (GRAINS) எனும் இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறைகளில் திட்டப் பயன்களை பெற தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டியிருப்பதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாவதை தவிர்க்கவும், இதன் மூலம் அரசின் பயன்கள் சரியான பயனாளர்களை சென்றடையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசுக்கும் விவசாயிகளுக்குமான இடைவெளி குறைய இணையதளம் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K