‘Gamechanger’ விருது பெற்ற பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா..!
பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிற்கு கேம்சேஞ்சர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
சிஎன்பிசி டிவி18-ன் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. அதில், பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா உட்பட மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி மற்றும் தற்போதைய இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய்ஷாவிற்கு சிஎன்பிசி டிவி18-ன் இந்தியா பிசினஸ் லீடர் விருதுகளில் (IBLA) ‘கேம் சேஞ்சர் ஆஃப் தி இயர்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஜெய்ஷா அந்த விருதை இந்திய மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு அர்ப்பணித்தார்.
Congratulations to BCCI Honorary Secretary @JayShah for being honoured with the prestigious Gamechanger Award at CNBCTV18 IBLA awards! The award is a recognition of BCCI’s leadership and unwavering commitment that has propelled Indian Cricket to unprecedented heights. pic.twitter.com/HKnDPqmOQo
— BCCI (@BCCI) May 12, 2023