ராகுல் காந்திக்கு தண்டனை வழங்கிய நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்தி வைப்பு.!
குஜராத்தில் சமீபத்தில் கீழமை நீதிபதிகள் உள்ளிட்ட 68 பேரின் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதியின் பதவி உயர்வை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம். அதாவது, அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிபதி எச்.எச்.வர்மாவின் பதவி உயர்வை நிறுத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.
ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்த சூரத் நீதிமன்ற நீதிபதிக்கு அண்மையில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வழங்கப்பட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், குஜராத்தில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கீழமை நீதிபதிகள் உள்ளிட்ட நீதித்துறை சார்ந்த 68 பேரின் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பழைய பதிவிலேயே நீதிபதி தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.