மாநில அரசுகளுக்கு ஆதரவான தீர்ப்பு.. டெல்லி ஆளுநரை நேரில் சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால்.!
நேற்று உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் டெல்லி துணைநிலை ஆளுநர் விகே சக்சேனாவை நேரில் சென்று சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு அதிகாரங்கள் குறித்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில், நிர்வாகம் தொடர்பாக அரசு அதிகாரிகள் இடமாற்றம் உளிட்ட செயல்பாடுகளில் மக்களால் தேர்நதெடுத்த அரசுக்கே முழு அதிகாரம் இருப்பதாகவும், மாநில அரசு உரிமைகளில் மத்திய அரசு தலையிட கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ஆம் ஆத்மி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பு வெளியான பிறகு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலில் டெல்லி துணை நிலை ஆளுநர் விகே.சக்சேனா இல்லத்திற்கு சென்றுள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என்று கெஜ்ரிவால் தரப்பு பதில் கூறியுள்ளது. அதன் பிறகு தனது அமைச்சர்களுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .
உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், ‘இன்றைய உச்ச நீதிமன்ற உத்தரவு வரலாற்று சிறப்புமிக்கது. அநீதி இழைக்கப்பட்ட டெல்லி மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். மாண்புமிகு உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு நீதி வழங்கியுள்ளது.’ என்று செய்தியாளர்களிடம் கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.