இபிஎஸ் பிறந்தநாள்..! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து..!

எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 69-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருவதோடு, சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கட்சியினர் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் தனது அதிகாரபூர்வ ட்விட்டரில் ‘தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமாகிய திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டுகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சரும் @AIADMKOfficial பொதுச்செயலாளருமாகிய திரு @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு @EPSTamilNadu அவர்கள், நல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும், மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டுகிறேன்.
— K.Annamalai (@annamalai_k) May 12, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025