இபிஎஸ்-க்கு பிறந்தநாள் – அதிமுகவினர் நேரில் வாழ்த்து!
சேலம் இல்லத்தில் கட்சியினர் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர் இபிஎஸ்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனை மற்றும் ஒற்றை தலைமை பிரச்னையை அடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுதொடர்பாக நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் தரப்பு மனு அளித்திருந்தது. இருந்தாலும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, அதிமுகவின் திருத்த விதிகளும் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருந்தது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை அடுத்து, இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 69வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் கட்சியினர் மத்தியில் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர் இபிஎஸ். பிரமாண்ட மாலையை பத்து பேர் தூக்கி வந்து எடப்பாடி பழனிசாமிக்கு அணிவித்தனர். இதுபோன்று, அதிமுக பொதுச்செயலாளர் ஈ.பி.எஸ் பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி மண் சோறு சாப்பிட்டார்.