ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு – புதிய தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை!
கடந்த 6ம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய தேதி அறிவிப்பு.
2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 6ஆம் தேதி நடைபெற்று என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சமயத்தில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த 6-ஆம் நடைபெற இருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்ட நிலையில், ஒட்டுமொத்த கலந்தாய்வு நிறுத்தப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 2022-23ம் ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 15 முதல் 26ம் தேதி வரை நடைபெறும் என பள்ளி கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, கடந்த 6-ஆம் தேதி நடைபெறவிருந்த கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது கலந்தாய்வுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.