இன்று பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடக்கம்!

Default Image

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான கலந்தாய்வை இந்தாண்டு முதல் இணையதளம் மூலம் நடத்துகிறது. இந்த ஆண்டு 1 லட்சத்து 59 ஆயிரத்து 631 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அவர்களுக்கான ரேண்டம் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் 42 இணைய சேவை மையங்களில் இன்று தொடங்கியுள்ள சான்றிதழ் சரிப்பார்ப்புப் பணிகள் வரும் 14-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.மாணவர்கள் இணையதளத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் நகல், 10, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் பிளஸ் 2 ஹால் டிக்கட், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றின் அசல் மற்றும் நகல்களை கொண்டு வரவேண்டும்.

முதல்தலைமுறை பட்டதாரி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட சலுகை கோருபவர்கள் அதற்கான சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்குகிறது. இதனிடையே ஆன்லைன் கலந்தாய்வு நடைமுறைகள் குறித்த விளக்க வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மையங்களில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கையேட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 509 கல்லூரிகள் குறித்த முழுவிவரங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்