இறந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகை பணியாளர் குடியிருப்பில் சடலம்!
இறந்த நிலையில் குடியரசுத் தலைவர் மாளிகையின் பணியாளர் குடியிருப்பில் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது அங்கு குடியரசுத்தலைவர் மாளிகை பணியாளரான திரிலோக் சந்த் என்பவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. திரிலோக் சந்தின் குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றுள்ள நிலையில் தனியாக இருந்த அவர் உடல் நலமின்றி இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ள போலீசார், அவர் மாரடைப்பால் இறந்திருக்கக் கூடும் என்று கருதினாலும், உயிரிழப்புக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.