உலகின் எந்த நீதிமன்றத்திலும் தமிழக அரசின் அரசாணை செல்லும்!அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார் ,தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் அரசாணை, உலகின் எந்த நீதிமன்றத்திலும் செல்லும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தூத்துக்குடியில் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதாகவும், விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதற்காக தான் அதிமுக அரசு பாடுபட்டது எனவும், இந்த ஆலை செயல்பட முதல் காரணம் திமுக தான் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக ஸ்டாலின் நீதிமன்றம் செல்ல உள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தூங்குகிறவர்களை எழுப்ப முடியும் ஆனால், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.