இன்றே விண்ணப்பியுங்கள்…12ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு இவ்வளவு சம்பளமா? எஸ்எஸ்சி அறிவிப்பு.!

SSC CHSL 2023

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தகுதியான வேலைகளுக்கு சம்பளமாக ரூ. 29,200 – ரூ. 92,300 ஆக வழங்கப்படுகிறது உடனே விண்ணப்பியுங்கள்.

SSC CHSL 2023: 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது, இப்பொது பல பதவிகளுக்கான விண்ணப்பங்களின் அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது.

அதன்படி, SSC CHSL 2023-க்கான பதிவுகளுக்கான விண்ணப்பம் மே 9 ஆம் தேதி தொடங்கியது, இதில் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் SSC-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி ஜூன் 8 வரை கொடுக்கப்பட்டுள்ளது, இதில் சுமார் 1600 காலி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

தகுதி :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

கீழ் பிரதேச எழுத்தர்/ஜூனியர் செயலக உதவியாளர் (JSA) மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO) பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். ஆனால், பெண் வேட்பாளர்கள், பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST), பெஞ்ச்மார்க் குறைபாடுகள் உள்ள நபர்கள் (PwBD), மற்றும் முன்னாள் ராணுவத்தினர்  விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.

வேலை மற்றும் சம்பளம்:

லோயர் டிவிஷன் கிளர்க் (எல்டிசி) ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்டென்ட் (ஜேஎஸ்ஏ) ஆகிய பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளமாக ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படுகிறது. மேலும், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவிகளுக்கு சம்பளமாக ரூ.25,500 – ரூ.81,100 மற்றும் ரூ.29,200 – ரூ.92,300 ஆக வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள pdf-ல் தெரிந்து கொள்ளலாம்.

https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/Notice_chsl_09052023.pdf

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School