பாகிஸ்தான் தீவிரவாதிகளை “கறுப்புப் பட்டியலில்” சேர்க்கும் இந்தியாவின் திட்டத்திற்கு சீனா எதிர்ப்பு!

indiavschina

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாதிகளை கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் இந்தியாவின் திட்டத்திற்கு சீனா எதிர்ப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் பயங்கரவாதியான அப்துல் ரவூப் அசாரை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா முன்மொழிந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 1999-இல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் IC814 கடத்தல், 2001-இல் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல், 2016-இல் பதான்கோட் IAF தளத்தை குறிவைத்தது உட்பட, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களை திட்டமிட்டு செயல்படுத்துவதில் JeM தலைவர் மசூத் அசாரின் சகோதரர் அப்துல் ரவூப் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில், UNSC-யில் 1267 ISIL மற்றும் அல்கொய்தா தடைகள் பட்டியலில் JeM இன் அப்துல் ரவூப்பை சேர்க்க இந்தியா முன்வைத்த முன்மொழிவுக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. 2010ல் ரவூப் அசார் அமெரிக்காவால் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஆண்டு, ரவூப் அசாரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கவும், சொத்து முடக்கம், பயணத் தடை மற்றும் ஆயுதத் தடைக்கு உட்படுத்தவும் இந்தியாவும் அமெரிக்காவும் முன்வைத்த திட்டத்தை சீனா நிறுத்தி வைத்தது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதிகளான ஹபீஸ் தலா சயீத், லஷ்கர் மஹ்மூத் மற்றும் சஜித் மிர் ஆகியோரை அல்-கொய்தா தடை பட்டியலில் சேர்க்கும் முன்மொழிவுகளையும் கடந்த ஆண்டு நிறுத்தி வைத்தது சீனா. இந்த சமயத்தில், தபோதும் ஐக்கிய நாடுகள் சபையில், பாகிஸ்தானை தளமாக கொண்ட பயங்கரவாதியான அப்துல் ரவூப் அசாரை கறுப்புப் பட்டியலில் சேர்க்க இந்தியா முன் வந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்