முன்னாள் மத்திய அமைச்சரும், ஜேடியு முன்னாள் முதல்வருமான ஆர்சிபி சிங் பாஜகவில் இணைந்தார்..!
முன்னாள் மத்திய அமைச்சரும், ஜேடியு முன்னாள் முதல்வருமான ஆர்சிபி சிங் பாஜகவில் இணைந்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும், ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் முதல்வருமான ராமச்சந்திர பிரசாத் சிங், டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
கடந்த ஆண்டு ஆர்சிபி சிங், சொத்து சம்பந்தப்பட்ட முரண்பாடுகள் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு கட்சி பதில் கேட்டதையடுத்து, ஜேடியூவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இந்நிலையில், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.
இதனையடுத்து பேசிய ஆர்சிபி சிங், பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு ‘சி’ (C)யில் தொடங்கும் வார்த்தைகள் பிடிக்கும். ‘நாற்காலி’ (Chair) என்ற வார்த்தையும் ‘சி’ யில் தொடங்குகிறது, தற்போது நாற்காலியில் அமருவதற்காக (ஆட்சி அமைப்பதற்காக) அனைத்தையும் செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
முன்னதாக, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ஆர்சிபி சிங் ராஜினாமா செய்ததை விமர்சித்ததோடு கட்சி அவருக்குப் பொறுப்பான பதவிகளை வழங்கிய போதிலும் அவர் குழப்பம் செய்ததாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Former Union Minister and JDU Leader Shri @RCP_Singh joins BJP in presence of Shri @dpradhanbjp at party headquarters in New Delhi. #JoinBJP https://t.co/jU672ccyr3
— BJP (@BJP4India) May 11, 2023